ராசிபுரம் அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி... சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

 
drowned

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குட்டையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானுர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ரக்சனா(14). இவர் ராசிபுரத்தில் உள்ள தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் நேற்று காலை, அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் ஜனனி (15) உடன் அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு தண்ணீரில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் சிறுமிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ரக்சனா, ஜனனி ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.  

rasipuram

தகவலின் பேரில் அங்கு வந்த ராசிபுரம் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அத்திப்பழகானுர் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.