வேலூர் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட பெண் உள்பட இருவர் கைது: 5 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல்!

 
vellore


வேலூர் அருகே பீஞ்ச மந்தை மலைக் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்ட பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் உலகநாதன், கருணாகரன் தலைமையிலான போலீசார், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.  அப்போது, அந்த பகுதியில் உள்ள ரவி மனைவி கமலா(50) என்பவரது மிளகாய் செடி தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

arrest

இதனை மிளகாய் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த 2.650 கிலோ எடையிலான 50 கஞ்சா  செடிகளை பறிமுதல் செய்தனர்.  இதேபோல், அருகில் உள்ள வெங்கடேசன் மகன் முத்துக்குமார்(22) என்பவரது தோட்டத்திலும் பயிரிட்டிருந்த 2.5 கிலோ எடையிலான 25 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் கமலா), முத்துக்குமார் ஆகியோரை போலீசார்  கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.