தென்காசியில் காரில் கடத்திய ரூ.3.5 கோடி ஆம்பர் கிரிஸ் பறிமுதல் - இருவர் கைது!

 
ambergris

தென்காசியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்திச்சென்ற ரூ.3.5 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரிசை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தென்காசி பழைய பேருந்து நிலையம் பகுதியில், தென்காசி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் எஸ்.ஐ கற்பகராஜா உள்ளிட்டோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது, காரில் அரசால் தடை  செய்யப்பட்ட ஆம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரை கடத்திச்சென்றது தெரியவந்தது. சுமார் 21 கிலோ எடையுள்ள அதன் மதிப்பு சுமார் 3.5 கோடி ரூபாய் ஆகும்.

arrest

இதுகுறித்து காரில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஜார்ஜ்(46) மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த மோகன்(50) என தெரியவந்தது. மேலும், ஆம்பர்கிரிஸை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திச்சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த தென்காசி போலீசார், அவர்களிடம் இருந்து ஆம்பர் கிரிஸ் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.