ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை!

 
robbery

ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜா, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். சுவாமி தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

police

அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து உள்ளே வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.