அருப்புக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை!

 
robbery

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரில் வசித்து வருபவர் செந்தில்வேல். ஓய்வுபெற்ற பேப்பர் மில் ஊழியர். இவரது மனைவி ஞான சக்திகுமாரி. இந்த நிலையில், சம்பவத்தன்று தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டி விட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். சிகிச்சை முடிந்து திரும்பியபோது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

virudhunagar ttn

இதுகுறித்து செந்தில்வேல், அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.