16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது!

 
arrest

திருப்பூரில் பிரார்த்தனைக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த  மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் அந்த பகுதியில் பெத்தேல் எழுப்புதல் தேவ திருச்சபையின் மதபோதகராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சாமுவேல், சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். 

rape

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மகளிர் போலீசார் மதபோதகர் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இதனிடையே சாமுவேல் தலைமறைவாகியதால் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று சாமுவேலை கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடுமலை சிறையில் அடைத்தனர்.