கருமந்துறை அருகே தோட்டத்தில் பதுக்கிய 150 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது!

 
slm

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த ராக்கோடு பகுதியில் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக தோட்ட உரிமையாளரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள ராக்கோடு பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட எஸ்.பி சிவகுமாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் ராக்கோடு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ராக்கோடு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் லாரி ட்யூப்களில் சாராய பாக்கெட்டுகளை அடைத்து வைத்திருந்ததும், பிளாஸ்டிக் குடம் மற்றும் பாத்திரங்களில் சாராய பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

liquor

இதனையடுத்து, போலீசார் 300 பாக்கெட்டுகளில் இருந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும்,  சாராயம் விற்பனையில் ஈடுபட்ட செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.