நாகர்கோவிலில் துணிகரம்... தேங்காய் வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை!

 
robbery

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேங்காய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் கணபதி நகரை சேர்ந்தவர் கவியரசு. இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கவியரசு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து நேற்று காலை நாகர்கோவிலுக்கு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவியரசு மற்றும் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, படுக்கை அறையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

kottar

இது குறித்து கவியரசு கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.