ஜோலார்பேட்டையில் ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹதியாவில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூருக்கு செல்லும் ஹதியா விரைவு ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ரயில்வே தனிப்படை போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் உடமைகளில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியின் கழிவறையில் கேட்பாரற்ற நிலையில் டிராலி சூட்கேஸ் ஒன்று கிடந்தது. சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் அந்த பெட்டியை திறந்து சோதனையிட்டனர்.

jolarpet

அப்போது, அதில் கஞ்சாவை மறைத்து கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பெட்டியில் இருந்த சுமார் 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதனை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு கஞ்சா கடத்தல் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதனை கடத்திச்சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.