முசிறியில் திருட்டு போன ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்கள் மீட்பு!

 
musiri

திருச்சி மாவட்டம் முசிறி பகுதிகளில் திருட்டு போன ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை தனிப்படை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சுஜீத்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் செல்போன் வழக்குகளை விரைந்து முடிக்க தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் சைபர் கிரைம் வாயிலாக புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட விசாரணையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்கள் மீட்கப்பட்டது.

police

இதனை தொடர்ந்து, முசிறி காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், டிஎஸ்பி யாஸ்மின் செல்போன்களை அவற்றி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார், முத்தையன், உதவி ஆய்வாளர்கள் திருப்பதி, கருணாநிதி, பயிற்சி ஆய்வாளர் கோமதி மற்றும் பொதுமக்கள், செல்போனை மீட்ட தனிப்படை காவலர் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.