10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது!

 
rape

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டிட தொழிலாளி மாரிஸ்வரன் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். அப்போது, மாரிஸ்வரன் திருமணம் செய்வதாக ஆசை வாத்தை கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

arrest

இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் மாரிஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.