திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 10ஆம் வகுப்பு மாணவர் பலி!

 
dead body

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி அரசுப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வி.மலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் விஜயகுமார் (15). இவர் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு சென்றிருந்த விஜயகுமார், வகுப்பு இடைவேளையின்போது வெளியே சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஓரு வீட்டிற்கு இழுக்கப்பட்ட மின்சார ஒயர் கீழே தொங்காமல் இருக்க, அதனை இரும்பு கம்பியை ஊன்றி கட்டி வைத்துள்ளனர். அந்த வழியாக சென்ற விஜயகுமார் அந்த கம்பியை தொட்டபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. 

sivagangai

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.