கிருஷ்ணகிரியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் புகார்களை தெரிவிக்க செல்போன் அறிவிப்பு!

 
krishnagiri collector

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, குறைதீப்பாளர் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) உருவாக்கப்பட்டு உள்ளது.

100 நாள் வேலைகள் முறையாக நடப்பதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து..

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக கே.எஸ்.எம்.டி அஸ்மத்துல்லா என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811314 மற்றும் மின்னஞ்சல் முகவரி Ombudsmankri@gmail.com

பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார்.