ஆட்சியர் திடீர் சோதனையில் 1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; 2 ஆயிரம் மஞ்சப்பைகள் அபராதம் விதிப்பு!

 
plastic

ராணிப்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள கடைகளில் நேற்று ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் நடத்திய திடீர் சோதனையில் 1.5 டன் தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் துணி மஞ்சப்பைகளை வாங்கி தர அபராதம் விதித்தார். 

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்திரோடு கடைத்தெருவில் உள்ள வணிகக் கடைகளில், நேற்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள மொத்த விற்பனை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து, கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.  இதனை அடுத்து, கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்த 1.5 டன் பிளாஸ்டிக் பைகளை, நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

plastic

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு, 2 ஆயிரம் துணியாலான மஞ்சப்பைகளை வாங்கி, ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அபராதம் விதித்தார். ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் காந்தி ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.