எட்டயபுரத்தில் சரக்கு வேனில் கடத்திச்சென்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 
ration rice

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சரக்கு வேனில் கடத்தமுயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் சரக்கு வேனில் சட்டவிரோதமாக ரேஷன் அரசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை எட்டயபுரம் அடுத்துள்ள மாதாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற சரக்கு வேனில் சோதனை மேற்கொண்டனர்.

ration

அப்போது, வேனில் இருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச்செல்வது தெரியவந்தது.  இதனை அடுத்து, சரக்கு வேனில் இருந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வானத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், அவற்றை எட்டையபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, எட்டயபுரம் போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.