சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்.25 ஆம் தேதி முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம்!

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்.25 ஆம் தேதி முதல் காங்கிரஸில் விருப்பமனு  விநியோகம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்.25 ஆம் தேதி முதல் காங்கிரஸில் விருப்பமனு  விநியோகம்!

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் ரூபாய் 100 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 5ஆம் தேதிக்குள் பொது தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரமும், தனித் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களும் மகளிர் தனித் தொகுதிகளுக்கும் ரூ.2,500 கட்சி நன்கொடையாக வரைவு காசோலை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்.25 ஆம் தேதி முதல் காங்கிரஸில் விருப்பமனு  விநியோகம்!

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு திமுக விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில் அதிமுக,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24 ஆம் தேதி முதல் விருப்பமனு விநியோகிக்கவுள்ளது.