அண்ணா சிலைக்கு அவமரியாதை: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை! – ஓ.பன்னீர்செல்வம் உறுதி

அண்ணா சிலைக்கு அவமரியாதை: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை! – ஓ.பன்னீர்செல்வம் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணா சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

அண்ணா சிலைக்கு அவமரியாதை: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை! – ஓ.பன்னீர்செல்வம் உறுதி
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள அண்ணா சிலை மர்ம நபர்களால் இன்று காலை அவமரியாதை செய்யப்பட்டது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில்

அண்ணா சிலைக்கு அவமரியாதை: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை! – ஓ.பன்னீர்செல்வம் உறுதி

அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

http://

பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்” என்று கூறியுள்ளார்.
கோவையில் பெரியார் சிலையையும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலையையும் விஷமிகள் அவமரியாதை செய்தனர். இதில் கோவையில் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.