அப்புறப்படுத்தப்படும் சென்னை பூர்வகுடி மக்கள் – இயக்குநர் ரஞ்சித் என்ன செய்தார் தெரியுமா ?

அப்புறப்படுத்தப்படும் சென்னை பூர்வகுடி மக்கள் – இயக்குநர் ரஞ்சித் என்ன செய்தார் தெரியுமா ?

சென்னை நகரை அழகுபடுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் கூவம் அடையாறு கரையோர மக்களை அப்புறப்புறபடுத்துவது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை கூலித் தொழிலாளர்கள்தான். தினசரி கூலித் தொழிலாளிகளாக இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்புறப்படுத்தப்படும் சென்னை பூர்வகுடி மக்கள் – இயக்குநர் ரஞ்சித் என்ன செய்தார் தெரியுமா ?

இவர்களை அப்புறப்படுத்தும் அதிகாரிகள், மாற்று இடமாக செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகளை அளிக்கின்றனர். ஆனால் அங்கு போதிய வசதி இல்லாமலும், வாழ்வாதாரம் இல்லாமல் இடம்பெயர்ந்த மக்கள் கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது.

அப்புறப்படுத்தப்படும் சென்னை பூர்வகுடி மக்கள் – இயக்குநர் ரஞ்சித் என்ன செய்தார் தெரியுமா ?

ஏற்கெனவே எக்மோர், சிந்தாதிரிபேட்டை உள்ளிட்ட இடங்களில் கூவம் கரையில் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்படனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தீவுத்திடல் அருகில் உள்ள சத்யவாணி முத்து நகரில் வசித்து வந்த மக்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அப்போது மக்கள் கூவம் ஆற்றி இறங்கி தற்கொலை செய்து கொள்வதாக குரல் கொடுத்தனர். சிலர் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் செய்தனர். அப்போது அங்கு வந்த இயக்குநர் ரஞ்சித், அந்த மக்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், உடனடியாக கரையேற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

அப்புறப்படுத்தப்படும் சென்னை பூர்வகுடி மக்கள் – இயக்குநர் ரஞ்சித் என்ன செய்தார் தெரியுமா ?

வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ளது தங்கவேலு தெரு. வித்யோதயா பள்ளி எதிரில், வள்ளுவர் கோட்டம் குப்பை கிடங்கை ஒட்டியதுபோல உள்ள இந்த தெருவில் 77 குடும்பங்கள் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது. இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில், தற்போது அவர்களை இயக்குநர் ரஞ்சித் நேரில் சென்று பார்த்துள்ளார்.

அப்புறப்படுத்தப்படும் சென்னை பூர்வகுடி மக்கள் – இயக்குநர் ரஞ்சித் என்ன செய்தார் தெரியுமா ?

போராடும் மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு வீடு இங்கேயே கட்டி தாருங்கள் நாங்கள் வெளியேற மாட்டோம் என ஒட்டுமொத்த மக்களும் தமிழக முதவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திரைத்துறையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மக்களின் கோரிக்கைகளுக்கான துணை நிற்பேன் என களத்துக்கு வரும் இயக்குநர் ரஞ்சித்தை, மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.