தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரை எங்கே நடத்துவது? அதிகாரிகள் ஆலோசனை

 

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரை எங்கே நடத்துவது? அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் ஆண்டு தோறும் 2 முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படும். கொரோனா பாதிப்புக்கு முன்னர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடந்த முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது கூட்டத்தொடர் அதாவது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டத்தொடர் எப்படி நடத்தப்படும் என கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக எம்எல்ஏக்கள் பலருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் இந்த குழப்பம் நீடிக்கிறது.

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரை எங்கே நடத்துவது? அதிகாரிகள் ஆலோசனை

கடந்த மாதம் புதுச்சேரி சட்டப்பேரவையில் பங்கேற்ற எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் மரத்தடியில் நடத்தி வேகவேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், இதே சூழல் தமிழக கூட்டத்தொடரிலும் நிலவக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக தற்போது சட்டப்பேரவை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை உள்ளே நடத்துவதா? வெளியே நடத்துவதா என ஆலோசனை நடைபெற்று வருகிறது.