தியேட்டர் திறப்பு பற்றி மத்திய அரசு ஆலோசனை; தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பா?!

 

தியேட்டர் திறப்பு பற்றி மத்திய அரசு ஆலோசனை; தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பா?!

தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசும் நடத்தும் ஆலோசனையில் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக மால்கள், தியேட்டர்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதில் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மூடப்பட்டுள்ள அனைத்தையும் மீண்டும் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து விட்டது. அதன் படி பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு, தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை..

தியேட்டர் திறப்பு பற்றி மத்திய அரசு ஆலோசனை; தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பா?!

இதன் காரணமாக தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டதோடு பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்த நிலையில் தியேட்டர்களை திறப்பது குறித்து, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வரும் 8 ஆம் தேதி தியேட்டர் உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளது. அந்த ஆலோசனையில் தென்னிந்திய திரையுலகம் பபுறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 800 படங்கள் எடுக்கும் திரையுலகத்தை புறக்கணித்து விட்டு, ஆண்டுக்கு சில படங்கள் எடுக்கும் குஜராத்தின் 2 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.