ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு நுழைவு வரியும் செலுத்திவிட்டேன் – இயக்குநர் ஷங்கர்

 

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு நுழைவு வரியும் செலுத்திவிட்டேன் – இயக்குநர் ஷங்கர்

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கான நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் மற்றும் தனுஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு நுழைவு வரியும் செலுத்திவிட்டேன் – இயக்குநர் ஷங்கர்

இது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஜய் கடந்த இரு தினங்களுக்கு முன் அபராதத்தை செலுத்தினார். ஆனால் நடிகர் தனுஷ் இதுவரை அபராதத்தை செலுத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இறக்குமதி கார்களுக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வணிக வரித்துறை ஆணையருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்தார்

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கான நுழைவு வரியை 2019 ஆம் ஆண்டே செலுத்திவிட்டேன் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இறக்குமதி காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ 37,40,979-ஐ 2019 செப்டம்பரில் செலுத்திவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், நுழைவு வரி செலுத்தும் உத்தரவை எதிர்த்து தொடரபட்ட வழக்கை முடித்துவைத்தார். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இறக்குமதி செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ மாடல் காருக்கு 15% வரி செலுத்தி பயன்படுத்தி வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு மீதத்தொகை செலுத்தப்பட்டுவிட்டதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.