சினிமா தெய்வமுங்க… தியேட்டர் தான் கோவிலுங்க… சூரரைப்போற்று படத்தை ஓடிடியில் வெளியிடாதீர்கள்! சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி கோரிக்கை

 

சினிமா தெய்வமுங்க… தியேட்டர் தான் கோவிலுங்க… சூரரைப்போற்று படத்தை ஓடிடியில் வெளியிடாதீர்கள்! சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி கோரிக்கை

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக 5 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையிலும், தியேட்டர் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காததாலும் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது எனக் கூறப்படுகிறது.

சினிமா தெய்வமுங்க… தியேட்டர் தான் கோவிலுங்க… சூரரைப்போற்று படத்தை ஓடிடியில் வெளியிடாதீர்கள்! சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி கோரிக்கை

இந்நிலையில் சூர்யாவின் ‘அருவா’படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் ஹரி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” என தெரிவித்துள்ளார்.