நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை: இயக்குநர் சேரன் வாழ்த்து!

 

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை:  இயக்குநர் சேரன் வாழ்த்து!

நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ள தமிழக மாணவர் ஜீவித் குமாருக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை:  இயக்குநர் சேரன் வாழ்த்து!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி. இவரின் மகன் ஜீவித் குமார். இவர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த ஆசிரியர் சபரிமாலாவின் மாணவன் ஆவார். அரசு பள்ளியில் படித்த ஜீவித் குமார் நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார். இவருக்கு முதல்வர், துணை முதல்வர், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வில் ஒரு கூலித்தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் அதிக மதிப்பெண்கள் பெற்று வென்றிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். நீட் தேர்வு தரும் அழுத்தத்தால் தற்கொலை வரை செல்லும் மாணவர்களின் மனநிலைக்கு அரசு பள்ளியில் படித்த இந்த மாணவனின் சாதனை நம்பிக்கை தரும் என்பதால் மட்டுமே இந்த பதிவு’ என்று பதிவிட்டுள்ளார்.