“சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்; பார்த்துவிட்டேன்” : இயக்குநர் பாரதிராஜா

“சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்;  பார்த்துவிட்டேன்” : இயக்குநர் பாரதிராஜா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள சசிகலா ஜெ. திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

“சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்;  பார்த்துவிட்டேன்” : இயக்குநர் பாரதிராஜா

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “வரும் சட்டமன்றத்தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றியைப் பெற வேண்டும்.அதற்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது அம்மாவின் கனவு. அதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நானும் உங்களுக்கு துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களை, மக்களையும் சந்திப்பேன்” என்றார்.

“சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்;  பார்த்துவிட்டேன்” : இயக்குநர் பாரதிராஜா

இதைத்தொடர்ந்து சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் சந்தித்து விட்டு சென்றனர்இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோரும் சசிகலாவை சந்தித்தனர்.

“சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்;  பார்த்துவிட்டேன்” : இயக்குநர் பாரதிராஜா

இந்நிலையில் சசிகலாவை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, “ஒரு சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்; பார்த்துவிட்டேன். ஒற்றை தமிழ் பெண்ணாக சோதனைகளை தாங்கி நிற்கும் பெண்மணியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளார் சசிகலா” என்றார்.