திண்டுக்கல் சீனிவாசனின் காமெடி பேச்சுகள் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

 

திண்டுக்கல் சீனிவாசனின் காமெடி பேச்சுகள் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

தமிழ்நாட்டை ஆளும் அதிமுவின் மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன். பல ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தர். தற்போது தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பதவியை அலங்கரித்து வருகிறார்.

திண்டுக்கல் சீனிவாசன் சமீபகாலமாக மேடையில் பேசுவதெல்லாம் காமெடியாக இருந்து வருகின்றன. பொங்கலுக்கு 2500 ரூபாய் பணமும் பரிசும் கொடுப்பது பற்றி திமுகவின் விமர்சனத்திற்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், “எல்லாமே தவறாக பார்க்கிறார்கள். மாமியார் உடைச்சா மண்குடம்; மருமகள் உடைச்சா பொன்குடம் என்று சொல்வதைப் போல இருக்கு. திமுக ஆட்சியில் இருக்கும்போது ஸ்டாலின் அப்பா இதெல்லால் கொடுத்திருந்தால், புத்தரின் வாரிசு, இயேசு நாதரின் வாரிசு என்று சொல்லிக்கொள்வார்கள். அதையே நாங்க செய்தா இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசா?” என்று சொல்லிவிட்டார்.

திண்டுக்கல் சீனிவாசனின் காமெடி பேச்சுகள் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

இந்தப் பேச்சுக்கு ட்விட்டரில், ‘இயேசு நாதரை சுட்ட கோட்சேவுக்கே அறிமுகமான ஆளுதான. இதெல்லாம் ஒரு மேட்டராண்ணே’ என்று கலாய்த்தார்கள்.

இன்னொரு நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டிருக்கையில் அங்கிருந்த குடிகாரரைக் காட்டி, நாம் பொங்கலுக்குக் கொடுக்கும் காசு டாஸ்மாக் மூலம் திரும்ப வந்துடும் என்று பேசியதும் வைரலாகி விட்டது. இதன் முழுவிவரத்தையெல்லாம் ஷேர் செய்யாமல், ‘பொங்கலுக்குக் கொடுக்கும் பணம் டாஸ்மாக் மூலம் திரும்ப வந்துடும் என்றார் என்றே பரவ, நெட்டிசன்களுக்குக் கேட்கவா வேண்டும்.

அதேபோல கட்சி நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ;நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்று திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். அதுவரை எல்லாம் சரியாகத்தான் போனது. திடீரென்று அந்தத் திருக்குறளை எழுதி ஒளவையார் என்று சொல்லிவிட்டார். மேடையில் இருந்த ஒருவர் அதை திருத்த வேண்டியதாயிற்று.

திண்டுக்கல் சீனிவாசனின் காமெடி பேச்சுகள் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

இன்னொரு மேடையில், “நீட் தேர்வு எழுதாமலேயே 7.5 சதவிகித இடஒதுக்கீடு மூலம் மருத்துவர் படிப்பு படிக்கலாம்’ என்பதாகப் பேசியிருக்கும் செய்திகள் வெளியாகின.

சில மாதங்களுக்கு முன் ஒரு சிறுவனை தன் காலில் இருந்த செறுப்பைக் கழற்றச் சொன்ன சம்பவம் பாருக்கும் நினைவில் இருக்கலாம்.

அமைச்சர் எனும் உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு சாதாரணம் விஷயங்கள்கூட தெரியவில்லையே என்று பலரும் கவலையோடு பார்க்கிறார்கள் நமது நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.