திண்டுக்கல்- இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்

 

திண்டுக்கல்- இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்

திண்டுக்கல்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அமெரிக்காவின் கோர்ஸரா
நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பற்ற 50 ஆயிரம் பேருக்கு, இணையவழியில் 11 பிரிவுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையிலான பாடங்களில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளித்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

திண்டுக்கல்- இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்


கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்
“கோர்ஸரா” நிறுவனம் 80 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளர்க்கும் இலவச பயிற்சி வகுப்புகளை இணையம் வழியாக நடத்தி வருவதாகவும், மேலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம்

திண்டுக்கல்- இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்

மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம் உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி, சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பயிற்றுநர்களைக் கொண்டு தரமான பாடக் குறிப்புகள் மற்றும் காணொளி

திண்டுக்கல்- இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்

பாடத்தொகுப்புகளுடன் பயிற்றுவிக்கப்படுவதாகவும், பயிற்சி முடிந்தவுடன் இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற விரும்புவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது
பூர்த்தியானவராகவும், வேலைவாய்ப்பு அற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், இப்பயிற்சியை பெற ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் வரும் 31ஆம் தேதிக்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனவும் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.