கோவிட்-19 தடுப்பூசியை தயாரிக்கும் பந்தயத்தில் இந்திய மக்களை கினியா பன்றிகளாக மாற்றக்கூடாது.. காங்கிரஸ்

கோவிட்-19 தடுப்பூசியை தயாரிக்கும் பந்தயத்தில் இந்திய மக்களை கினியா பன்றிகளாக மாற்றக்கூடாது.. காங்கிரஸ்

கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் பந்தயத்தில் இந்திய மக்களை கினியா பன்றிகளாக மாற்றக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் வலியுறுத்தியுள்ளார்.

கொடிய தொற்றுநோயான கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகளின் பரிசோதனைகளை நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தடுப்பூசியை தயாரிக்கு பந்தயத்தில் இந்தியர்களை கினியா பன்றிகளாக மாற்றக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசியை தயாரிக்கும் பந்தயத்தில் இந்திய மக்களை கினியா பன்றிகளாக மாற்றக்கூடாது.. காங்கிரஸ்
திக்விஜய சிங்

இது தொடர்பாக திக்விஜய சிங் கூறியதாவது: சர்வதேச தலைவர்கள் இடையே ஒரு போட்டி நடந்து வருகிறது. எந்த தடுப்பூசி எந்த நிறுவனத்தில் பயன்படுத்த வேண்டும், இதனை தவிர்க்க வேண்டும். இந்திய மக்கள் கினியா பன்றிகளா (பரிசோதனை சப்ஜெக்ட்) மாற்றக்கூடாது. ஹரியானா அமைச்சர் விஜ் சஹாப் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தடுப்பூசி போட்டார். ஆனால் பின்னர் அவர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அவர் அளவுகள் மற்றும் கால அளவு குறித்து விளக்குகிறார்.

கோவிட்-19 தடுப்பூசியை தயாரிக்கும் பந்தயத்தில் இந்திய மக்களை கினியா பன்றிகளாக மாற்றக்கூடாது.. காங்கிரஸ்
கோவிட்-19 தடுப்பூசி

மோடிஜி தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு மற்றும் தனது ஈகோவுக்கு மேலே அவர் உயர வேண்டும் என்று அவரிடம் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற்று, அனைத்து விவசாய தொழிற்சங்கங்கள் மற்றும் உழவர் அமைப்புகளுடன் கலந்துரையாட ஒரு கூட்டு நாடாளுமன்றம் அல்லது தேர்வுக் குழுவை உருவாக்கி, சட்டங்களை மீண்டும் வரைவு செய்தால், இந்த போராட்டத்தை திரும்ப பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.