‘ஹைடெக் வகுப்பறைகள்’ டிஜிட்டல் மயமாக்கப்படும் கேரள அரசுப் பள்ளிகள்!

 

‘ஹைடெக் வகுப்பறைகள்’ டிஜிட்டல் மயமாக்கப்படும் கேரள அரசுப் பள்ளிகள்!

கேரளாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகலும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, அரசுப் பள்ளிகள் செயல்படுகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிறந்த கல்வியை பெறுவதற்காகவே, பெற்றோர்கள் சிரமப்பட்டு தனியார் பள்ளிகளில் சேர்க்கும் சூழலே நிலவுகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களின் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கவே விரைகின்றனர்.

‘ஹைடெக் வகுப்பறைகள்’ டிஜிட்டல் மயமாக்கப்படும் கேரள அரசுப் பள்ளிகள்!

இந்த நிலையில், கேரளாவின் அனைத்து அரசு பள்ளிகளையும் டிஜிட்டல் மயமாக்கும் புதிய முயற்சியை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இது குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசு பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்குவதன் ஒரு பகுதியாக, ஹைடெக் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் ஸ்மார்ட் வகுப்பறை எனப்படும் இந்த திட்டத்திற்காக இதுவரை 3,74,274 டிஜிட்டல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஹைடெக் வகுப்பறைகள்’ டிஜிட்டல் மயமாக்கப்படும் கேரள அரசுப் பள்ளிகள்!

1 முதல் 7ம் வகுப்பு வரையில் ஹைடெக் ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்படுவதாகவும் 8 முதல் 12ம் வகுப்பு வரையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 45,000 வகுப்பறைகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசின் கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் இவை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசு பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.