மனித மூளை செயல் திறனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டிஜிட்டல் உலகம்!

 

மனித மூளை செயல் திறனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டிஜிட்டல் உலகம்!

இணையதளம் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக உலகமே நம் கைக்குள் வந்துவிட்ட உணர்வு வந்துவிட்டது. நொடியில் நமக்கு தேவையான விவரத்தை தேடிவிட முடிகிறது, விரும்பிய நேரத்தில் பொழுதுபோக்கு கிடைத்துவிடுகிறது, உறவுகள், சமூக தொடர்புகளை நொடியில் மேற்கொள்ள முடிகிறது.

மனித மூளை செயல் திறனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டிஜிட்டல் உலகம்!

இந்த இணையதள தாக்கம் நம்முடைய மூளையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு காலத்தில் எதையும் மனக் கணக்காக சொல்லிவிடுவோம், உறவினர்கள், நண்பர்கள் தொலைபேசி எண் எல்லாம் நினைவில் இருக்கும், நண்பர்கள் – உறவினர்களுடன் நிஜத்தில் உறவாடினோம். அவை எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது.

நினைவாற்றல் பாதிப்பு

இணையம் வருவதற்கு முன்பு எல்லா உண்மைகளையும் நாம் நம்முடைய மூளையில் பதிவேற்றி வைப்போம். இந்த சம்பவம் எப்போது நடந்தது, எந்த ஆண்டு யார் பிரதமராக இருந்தார்கள் என அனைத்தும் நினைவில் வைத்திருந்தோம். புது புது விவரங்கள் மூளையில் அப்டேட் செய்து கொண்டே இருந்தோம். இதனால் நியாபகசக்தி அதிக அளவில் இருந்தது.

தற்போது இணையம் வருகையால் எந்த ஒரு தகவலையும் நினைவில் வைத்திருக்க தேவையில்லை என்ற நிலை வந்துவிட்டது. எந்த விவரம் தேவை என்றாலும் நொடியில் இணையத்தில் தேடி பெற்றுக்கொள்கிறோம். உடனடியாக அதை மறக்கவும் செய்துவிடுகிறோம். இதனால் நீண்ட நாள் நினைவில் இருக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

சோஷியல் இன்டராக்‌ஷன்

சமூக ஊடகங்கள் மூலமாக புதிய நட்பு, உறவை தேடுவது அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்களில் அதிக நட்பு இருந்தாலும், நிஜ வாழ்வில் தனிமையிலேயே இருக்க வேண்டியுள்ளது. இதனால் பொது இடங்களில் மற்றவர்களுடன் இயல்பாக பழக முடியாமல், தனிமை உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியாமல் இளைய தலைமுறையினர் திணறி வருகின்றனர்.

கவனம் சிதைகிறது அல்லது சிதறுகிறது

ஒரே நேரத்தில் இணையத்தில் பல வேலைகளை செய்கிறோம். இதில் எதுவும் நம்முடைய நினைவில் பதிவது இல்லை. இதனால் நம்முடைய நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படுகிறது. இன்றைய சமூக ஊடகம், ஸ்மார்ட் போன்கள் மூலம் ஒருவர் எளிதில் தன்னுடைய கவனத்தைச் சிதறவிட முடியும்.

தீவிரமாக வேலை செய்துகொண்டிருப்போம் அமேசான், ஃபிளிப் கார்ட்டில் இருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வரும் அல்லது ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். நம்முடைய வேலை அனைத்தையும் விட்டுவிட்டு அந்த தகவலின் பின்னால் சென்றுவிடுவோம். இது நம்முடைய மூளை நினைவு திறனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.