திருச்சியில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த டிஐஜி ஆனி விஜயா!

 

திருச்சியில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த டிஐஜி ஆனி விஜயா!

இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் முழு ஊரடங்கை டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி சரக டிஐஜி-யாக ஆனி விஜயா இரண்டு நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். திருச்சி சரகத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன. பொறுப்பேற்ற உடனேயே திருச்சி சரகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரைப் பயன்படுத்த தடை விதித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருச்சியில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த டிஐஜி ஆனி விஜயா!

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஆனி விஜயா சைக்கிளில் சென்றார். டிராக் சூட் அணிந்து பொது மக்களைப் போல அவர் சைக்கிளில் சென்றார். வருவது டிஐஜி என்று தெரியாமல் காவலர்கள் தடுத்து விசாரித்துள்ளனர். வந்திருப்பது டிஐஜி என்று தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் பாதுகாப்பு தொடர்பாக ஆனி விஜயா கேள்வி எழுப்பினார். தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் படி உத்தரவிட்டார். திருச்சியில் 20 கி.மீ தூரத்துக்கு அவர் சைக்கிளிலேயே சென்று ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட எல்லையான மாத்தூர் வரை அவர் சைக்கிளிலேயே சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு என்று பெரிய படை எதுவும் வரவில்லை. ஒரே ஒருவர் பைக்கில் அவரைத் தொடர்ந்து வந்தார். ஆனி விஜயா சைக்கிளில் வந்து ஆய்வு செய்கிறார் என்ற தகவல் போலீசார் மத்தியில் பரவியது. இதனால் போலீசார் மத்தியில் பரபரப்பு நிலவியது.