டெல்லியில் பெட்ரோலை முந்திய டீசல் விலை! – வாகன ஓட்டிகள் வேதனை

டெல்லியில் பெட்ரோல் விலையை ஓவர்டேக் செய்து டீசல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயித்த நிலை மாறி, எண்ணெய் நிறுவனங்கள் கைக்கு சென்றதில் இருந்து விலை தாறுமாராக உயர்ந்து வருகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை சற்றுக் குறைவாக இருக்கும். ஒரு காலத்தில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இடையே 20, 25 ரூபாய் அளவுக்கு எல்லாம் வித்தியாசம் இருந்தது. இதனால் பலரும் பெட்ரோலில் ஓடும் வாகனத்தை விட்டுவிட்டு டீசலில் இயங்கும் வாகனத்துக்கு மாறினார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக டீசலுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டதால் அதுவும் கிட்டத்தட்ட பெட்ரோல் விலைக்கு அருகில் வந்துவிட்டது.

தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை உயர்வு பற்றி கேள்வி கேட்காமல் இருப்பதுதான் தேசபக்தி என்று கூறப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடிதான் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணம் என்று கூட மோடி ஆதரவாளர்கள் வதந்தியை பரப்பினார்கள்.

தற்போது டெல்லியில் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.76 ஆகவும் டீசல் விலை ரூ.79.88 ஆகவும் உள்ளது. இதனால் விலைவாசி உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அரசின் காதில் இதை சொல்வது யார் என்றுதான் தெரியவில்லை.

- Advertisment -

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை...

`திருமணம் செய்ய முடியாது; கருவை கலைத்து விடு!’- 17 வயது காதலியை கர்ப்பமாக்கிய காதலன்

17வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கருவை கலைக்க சொன்னதோடு, திருமணம் செய்ய மறுத்ததால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் காதலன். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

இன்றைய ராசிபலன் 04-07-2020 (சனிக்கிழமை) நல்ல நேரம் காலை 10.45 மணி முதல் 11.45 வரை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை ராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 வரை எமகண்டம் பிற்பகல் 1.30 மணி முதல்...

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...
Open

ttn

Close