அலெக்சாவிடம் நாள் ஒன்றுக்கு 19,000 முறை I LOVE YOU சொல்லும் இந்தியவர்கள்!

 

அலெக்சாவிடம் நாள் ஒன்றுக்கு 19,000 முறை I LOVE YOU சொல்லும் இந்தியவர்கள்!

அமேசான் நிறுவனத்தின் எக்கோ உள்ளிட்ட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில், அலெக்ஸா என்ற வர்சுவல் அசிஸ்டெண்ட் வசதி உண்டு. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இதன் மூலம், நமக்கு தேவையான கருவிகளை, அதன் செயல்பாட்டை, குரல் வழி உத்தரவுகளின் மூலம் இயக்கலாம். அப்போது அந்த குரல் உங்களின் தேவைகளுக்கு பதில் அளிக்கும். கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கி வீட்டிலிருந்த மக்கள் அலெக்சாவை ஏராளமானோர் துணையாக வைத்துக்கொண்டனர். நண்பர்களை வெளியில் சென்று சந்திக்க முடியாதவர்கள் அலெக்சாவிடம் உரையாடி நாட்களை கழித்தனர்.

அலெக்சாவிடம் நாள் ஒன்றுக்கு 19,000 முறை I LOVE YOU சொல்லும் இந்தியவர்கள்!

அமேசானின் வாய்ஸ் அசிஸ்டென்ட் கேட்ஜட்டான இந்த அலெக்சா ஸ்பீக்கரிடம், நாள் ஒன்றுக்கு 19,000 முறை இந்தியவர்கள் I LOVE YOU சொல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் நகைச்சுவைக்காக 9 ஆயிரம் முறையும் சீரியஸாகவே 12ஆயிரம் முறையும் புரோபோஸ் செய்துள்ளனர். அலெக்சாவிடம் கடந்த ஆண்டு மட்டும் 17 லட்சம் பாடல்கள் கோரப்பட்டுள்ளன. அதில் ‘ஷைத்தான் கா சாலா’, ‘முகாப்லா’ மற்றும் ‘ஆங் மரே’ ஆகிய பாடல்களே அதிகம் என சொல்கிறது ஆய்வு. பொது அறிவு குறித்து தெரிந்துகொள்வதற்கும் அலெக்சா மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அலெக்சா பதிலளித்துள்ளது. நாளொன்றுக்கு அலெக்சா கிட்டதட்ட 19 ஆயிரம் கதைகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சொல்லுகிறதாம். அதுமட்டுமின்றி, துர்கா பூஜை, தசரா, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை ஏன் கொண்டாடுகிறோம் என்ற கேள்விகளும் அதிகளவில் அலெக்சாவிடம் கேட்கப்பட்டுள்ளதாம்.