எல்லை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தாரா மோடி?

 

எல்லை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தாரா மோடி?

பிரதமர் மோடி இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை திடீரென்று சென்று சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லையின் கள நிலவரம் பற்றி அவருடன் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி எந்த அறிவிப்புமின்றி லடாக் மாநிலத்துக்கு சென்றார். அங்கு 20 நாட்களுக்கு முன்பு சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களிடம் பேசினார். இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் தேசபக்தி என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் வாயை அடைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

எல்லை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தாரா மோடி?

இந்த நிலையில் இன்று காலை திடீரென்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லை நிலவரம் தொடர்பாக, இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து அவருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி கிழித்தக் கோட்டைத் தாண்டாதவராக உள்ள ராம்நாத் கோவிந்தை சந்தித்து விளக்கம் அளித்தார் என்று கூறப்படுவது வியப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் லடாக் சென்று திரும்பிய நிலையில் குடியரசுத் தலைவருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.