தோனி, சி.எஸ்.கே-வுடன் பிரச்னை இல்லை… விரைவில் அணிக்குத் திரும்புவேன்! – ரெய்னா விளக்கம்

 

தோனி, சி.எஸ்.கே-வுடன் பிரச்னை இல்லை… விரைவில் அணிக்குத் திரும்புவேன்! – ரெய்னா விளக்கம்


தோனி, சி.எஸ்.கே-வுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை, பயிற்சியில்தான் இருக்கிறேன், விரைவில் அணிக்குத் திரும்புவேன் என்று சுரேஷ் ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி மிகத் தாமதமாக துபாயில் தொடங்க உள்ளது. துபாய் சென்ற சி.எஸ்.கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா நாடு திரும்பினார். மேலும், இந்த சீசனில் விளையாடவில்லை என்றும் செய்தி

தோனி, சி.எஸ்.கே-வுடன் பிரச்னை இல்லை… விரைவில் அணிக்குத் திரும்புவேன்! – ரெய்னா விளக்கம்

வெளியானது. ஆனால், அவருடைய நெருங்கிய உறவினர் படுகொலை செய்யப்பட்டதால் நாடு திரும்பியதாக ரெய்னா கூறினார். ஆனால், தோனிக்கு ஒதுக்கியது போல ரெய்னாவுக்கு பால்கனியுடன் கூடிய அறை ஒதுக்கப்படவில்லை என்பதால் சி.எஸ்.கே நிர்வாகத்துடன் சண்டை போட்டுவிட்டு அவர் திரும்பியதாக செய்தி வெளியானது.

தோனி, சி.எஸ்.கே-வுடன் பிரச்னை இல்லை… விரைவில் அணிக்குத் திரும்புவேன்! – ரெய்னா விளக்கம்


இந்த நிலையில் இது குறித்து சுரேஷ் ரெய்னா விளக்கம் அளித்துள்ளார். அதில், “தோனியுடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் எனக்கு எந்தவிதமான மோதலும் இல்லை. சி.எஸ்.கே என்பது குடும்பத்தைப் போன்றது. வலுவான காரணம் இல்லாமல் யாராவது 12.5 கோடி ரூபாயை இழக்க முன்வர மாட்டார்கள்.

தோனி, சி.எஸ்.கே-வுடன் பிரச்னை இல்லை… விரைவில் அணிக்குத் திரும்புவேன்! - ரெய்னா விளக்கம்


நான் இந்தியா திரும்பியதற்கு குடும்ப சூழலே காரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். பயிற்சியில்தான் இருக்கிறேன். விரைவில் சி.எஸ்.கே அணிக்குத் திரும்புவேன்.
சி.எஸ்.கே உரிமையாளர் சீனிவாசன் எனக்குத் தந்தையைப் போன்றவர். என்னைப் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன. நான் நாடு திரும்பிய காரணம் இந்தியா வந்த பிறகே அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது” என்றார்.