காங்கிரஸ் முதல்வர்களிடம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சொல்லுங்க ராகுல்.. தர்மேந்திர பிரதான்

காங்கிரஸ் முதல்வர்களிடம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சொல்லுங்க ராகுல்.. தர்மேந்திர பிரதான்

எரிபொருள் விலையால் ஏழைகள் பாதிக்கப்படுவது குறித்து ராகுல் காந்தி கவலைப்பட்டால், காங்கிரஸ் முதல்வர்களிடம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சொல்ல வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

கடந்த மே 4ம் தேதி முதல் இதுவரை 23 பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5.72-ம், டீசல் லிட்டருக்கு ரூ.6.25-ம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்நது குரல் கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் முதல்வர்களிடம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சொல்லுங்க ராகுல்.. தர்மேந்திர பிரதான்
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக கூறியதாவது: எரிபொருள் விலை நுகர்வோரை பாதிக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

காங்கிரஸ் முதல்வர்களிடம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சொல்லுங்க ராகுல்.. தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

இந்த ஆண்டு மட்டும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது. தவிர தடுப்பூசிகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளுக்கு பணம் செலவிடுகிறது. எரிபொருள் விலையால் ஏழைகள் பாதிக்கப்படுவது குறித்து ராகுல் காந்தி கவலைப்பட்டால், வரிகளை (எரிபொருள் மீதான) குறைக்குமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களிடம் அவர் கேட்க வேண்டும். வரிகளை குறைக்குமாறு உத்தவ் தாக்கரேவிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.