தர்மபுரி- முன்னாள் ஆசிரியை சபரிமாலா உட்பட 250-க்கும் மேற்பட்டோர் கைது !

 

தர்மபுரி- முன்னாள் ஆசிரியை சபரிமாலா உட்பட  250-க்கும் மேற்பட்டோர் கைது !

தர்மபுரி

தர்மபுரியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அரசு ஆசிரியை சபரிமாலா உள்ளிட்ட 250 க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி பணியை ராஜினாமா செய்தவரும், பெண் விடுதலை கட்சியின் நிறுவனருமான சபரிமாலா, தருமபுரியில் ஆசிரிய பணி வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

2013-ம் ஆண்டு டெட் தேர்வு எழுதியவர்களுக்கு தற்போது வரை ஆசிரியர் பணி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், டெட் தேர்வில் வெற்றி பெற்றாலும் 7 ஆண்டுகள் வரை மட்டுமே அந்த தேர்ச்சி செல்லும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, டெட் தேர்வில் வெற்றிபெற்று பணி வாய்ப்புகாக காத்திருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி- முன்னாள் ஆசிரியை சபரிமாலா உட்பட  250-க்கும் மேற்பட்டோர் கைது !

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சபரிமலா தலைமையில், டெட் முடித்து ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கினர்.
அப்போது பேசிய சபரிமலா, ” டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை பணி வாய்ப்பு வழங்காமல் இருப்பதே மிகப்பெரிய வஞ்சனையான செயல். எனவே, டெட் தேர்வில் பெறும் வெற்றி 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்ற நிலையை மாற்ற வேண்டும். ஒருமுறை வெற்றி பெற்றாலே போதும் என்று அரசு அறிவிக்க வேண்டும். டெட் தேர்வில் வெற்றி பெற்று பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு அரசு உடினடியாக அரசு வேலை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தர்மபுரி- முன்னாள் ஆசிரியை சபரிமாலா உட்பட  250-க்கும் மேற்பட்டோர் கைது !

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அவர்களை  கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்துள்ளனர். அங்கு போராட்டக் குழுவினர், உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசிடம் இருந்து உடனடியாக தங்கள் கோரிக்கைக்க்கு பதில் வரவில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் சபரிமாலா தலைமையிலான குழுவினர் கூறியுள்ளனர்.