தர்மபுரி: அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல் படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

 

தர்மபுரி: அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல் படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல் படுத்தக் கோரி தருமபுரி மாவட்ட ஏஐடியூசி பொதுப் பணியாளர் சங்க துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகன், குப்புசாமி, சிவன், பெரியசாமி, மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாவட்ட தலைவர் எம்.மாதேஸ்வரன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். தேவராசன் சிறப்புரையாற்றினார்.

தர்மபுரி: அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல் படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி சம்மேளன மாநிலக்குழு உறுப்பினர் இராமமூர்த்தி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் கந்தசாமி, நிர்வாகி வணங்காமுடி, புகழேந்தி, இராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி ஆர்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

ஆர்பாட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். தூய்மை காவலர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சட்டமன்றத்தில் அறிவித்த ஒரு மாத சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி பணியாளர்களுக்கு ரூ 50 லட்சம் காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும். பி.எப். சேம நல நிதித்தொகை, சிபிஎஸ் பங்களிப்பு தொகை வருடம் ஒருமுறை கணக்கிட்டு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது குறைந்த பட்சம் ரூ 3500 வழங்க வேண்டும். இலவசமாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். உள்ளாட்சி பணியாளர்கள் அனைவருக்கும் முறையாக மாத ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தர்மபுரி: அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல் படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்