‘4 பேருக்கு டிஜிபி பதவி’…தமிழக காவல்துறையில் மாற்றம் செய்ய அரசு முடிவு; பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

 

‘4 பேருக்கு டிஜிபி பதவி’…தமிழக காவல்துறையில் மாற்றம் செய்ய அரசு முடிவு; பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருக்கும் சத்தியமூர்த்தியின் பணிவுக்காலம் வரும் 31 ஆம் தேதியோடு முடிவடைகிறது. அன்று ஞாயிற்று கிழமை என்பதால், வரும் சனிக்கிழமை வரை மட்டுமே அவர் பணியாற்றுவார். அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் உடன் நெருக்கமாக இருந்த சத்தியமூர்த்திக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் அவரிடம் கேட்டார். ஆனால் சத்தியமூர்த்தி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். இன்னும் 11 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது, ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் அவர் பணி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது.

‘4 பேருக்கு டிஜிபி பதவி’…தமிழக காவல்துறையில் மாற்றம் செய்ய அரசு முடிவு; பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

உளவுத்துறை ஐஜி பதவிக்கு ஏடிஜிபி அல்லது டிஜிபி பதவியில் இருக்கும் அதிகாரிகளை நியமிக்கலாம் என்பதால் ஐஜி சத்தியமூர்த்தியும், டிஜிபி திரிபாதியும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள ஈஸ்வரமூர்த்தியை பரிந்துரை செய்துள்ளதாகவும் அதனால் அவரே ஐஜியாக நியமிக்கப் படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி மாகாளி, சமூக நீதித்துறை டிஜிபி லட்சுமி பிரசாத், காவலர் நலன் ஏடிஜிபி சேஷசாயி ஆகியோரும் பணி ஓய்வு பெறுவதால் அந்த காலி இடங்களையும் நிரப்ப கடும் போட்டி நிலவுகிறது.

இதனிடையே தமிழக அரசு காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் காவல்துறையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. மேலும், தற்போது ஏடிஜிபிக்களாக இருக்கும் கந்தசாமி, மகாளி, ஷகீல்அக்தர், ராஜேஷ்தாஸ் ஆகிய 4 பேருக்கும் டிஜிபி பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் அவர்கள் 4 பேருக்கும் விரைவில் அரசு டிஜிபிக்களாக பதிவு உயர்வு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.