பாதுகாப்பு குறைபாடு… 2019ம் ஆண்டே கோழிக்கோடு விமானநிலையத்துக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிசிஏ

பாதுகாப்பு குறைபாடு… 2019ம் ஆண்டே கோழிக்கோடு விமானநிலையத்துக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிசிஏ

கோழிக்கோடு விமான நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளது என்று 2019ம் ஆண்டே சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடு… 2019ம் ஆண்டே கோழிக்கோடு விமானநிலையத்துக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிசிஏ
கோழிக்கோடு விமான விபத்தில் பைலட்கள் உள்பட 18 பேர் பலியாகினர். விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் விமானம் சருக்கியது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஓடுதளத்தின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு, ஓடுதளத்தில் போதுமான வெளிச்சம் இன்மையே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாடு… 2019ம் ஆண்டே கோழிக்கோடு விமானநிலையத்துக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிசிஏ
கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி கோழிக்கோடு விமானநிலையத்துக்கு டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (டிஜிசிஏ) ஓடு பாதையில் மழைக் காலத்தில் தண்ணீர் அதிகம் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் ஓடு பாதையில் விமானம் தரையிரங்கும் போது டயர் தேய்ந்து ரப்பர் படிவதை அவ்வப்போது அகற்றவும் உத்தரவிட்டிருந்தது. கோழிக்கோடு விமானநிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாடு… 2019ம் ஆண்டே கோழிக்கோடு விமானநிலையத்துக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிசிஏ
இதுவே விமானம் தற்போது விபத்தைச் சந்திக்கக் காரணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓடுதளம் பற்றி ஆய்வு செய்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஓராண்டு என்ன செய்தது, தன்னுடைய பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்யாதது ஏன்? தற்போது திடீரென்று போன ஆண்டே நாங்கள் கூறினோம் என்று சொல்லி பொறுப்பை தட்டிக்கழிக்க பார்ப்பது ஏன் என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.