வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டுமா? இதை செய்யுங்கள்!!

 
tn

வாரத்தில் ஏழு நாட்கள் இருந்தாலும் வெள்ளிக்கிழமை என்பது தெய்வீகமான நாளாக கருதப்படுகிறது.  எந்த காரியம் என்றாலும் அதை வெள்ளிக்கிழமைகளில் செய்வது பலரும் விரும்பும் ஒன்று. வீட்டில் செல்வம் பெருகவும்,  சுபிக்ஷம் நிறையவும் வெள்ளிக்கிழமைகளில் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டியது அவசியம். 

tn

வெள்ளிக்கிழமைகளில் சொல்லும் காயத்ரி மந்திரம்:- 

ஓம் பூர் புவஸ்வஹ

தத்ஸ விதூர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன ப்ரசோதயாத்


வெள்ளிக்கிழமை தோறும் காயத்ரி மந்திரத்தை வீட்டில் விளக்கேற்றி ஒன்பதுமுறை அல்லது 18 முறை , 27 முறை , 99 முறை , 108 முறை என ஜபிக்கலாம். 

காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க முடியாவிட்டாலும், தினமும்  பத்து நிமிடமாவது காதில் கேட்குமாறு பதிவொலியில் வீட்டிலே ஒலித்தாலும் நன்மைகள் கிட்டும். குறிப்பாக வீட்டிலே தேவையில்லாத தீயசக்திகள் தோஷம் அனைத்தும் விலகி குடும்பம் சுபிட்சம் பெறும். 

gtn

குழந்தைகள் காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது,  அறிவு வளர்ச்சி பெற்று படிப்பில் மிக சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். வீட்டிலுள்ள குழப்பங்கள் நீங்கும். 

எனவே வாழ்க்கையில் வறுமை நீங்கி செல்வம் பெருகவும்,  வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து  வாழ்வில் சிறப்பினை அடைவோம்.