நோய், பகை அழிய சொல்ல வேண்டிய வராஹ ஸ்லோகம்!

 
 Lord Vishnu  Lord Vishnu

பூமியைக் காக்கப் பெருமாள் எடுத்த மூன்றாவது அவதாரம் வராஹ மூர்த்தி அவதாரம் ஆகும். வராஹ மூர்த்தியை மனதில் நினைத்து தினமும் 27 முறை அல்லது 108 முறை வராஹர் மந்திரத்தைச் சொல்லி வந்தால் கொடிய நோய்கள் நீங்க, பகை, தோஷங்கள் அழியும். கிரக தோஷம் நீங்க புதன் மற்றும் சனிக் கிழமைகளில் பெருமாள் சன்னதியில் நின்று இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறைசொல்லி வர வேண்டும்.

மந்திரம்:

ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்

கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்

தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

விளக்கம்:

சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, முழு நிலவைப் போல ஒளி படைத்தவரே, வராஹ மூர்த்தியே உம்மை வணங்குகிறேன். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, உயிர்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் அருள்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே வணக்கம்.

வராஹர் காயத்ரி மந்திரம் :

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி

தன்னோ வராஹ ப்ரசோதயாத்!

இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வருவதன் மூலம் நம்மை ஆட்டிப்படைக்கும் துன்பங்கள், கண் திருஷ்டி, கெட்டவை நம்மைவிட்டு விலகும். செல்வச் செழிப்பு ஏற்படும்.