வீட்டில் செல்வவளம் பெருக இதை செய்யுங்கள் போதும்...

 
வீட்டில் செல்வவளம் பெருக இதை செய்யுங்கள் போதும்...

வீட்டில் செல்வவளம் பெருக வேண்டுமானால் அதற்கு வாஸ்டு பலம் பெற்றிருக்க வேண்டும்.  அதற்கு சில நியமனங்களைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.  

டிவி, மிக்சி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை  ஆடம்பர பொருட்களாக பார்க்கப்பட்டவை.. ஆனால் இன்று அவையெல்லாம் அத்தியாவசியமாகிவிட்டது. அதேபோன்று தான் ஏசி, இருசக்கர வாகனம், கார் போன்றவையும் அந்தந்த குடும்பத்தின்  பொருளாதார நிலைக்கு ஏற்ப அவசியமானதாகி விட்டது.  

வீட்டில் செல்வவளம் பெருக இதை செய்யுங்கள் போதும்...

இதுபோன்ற பொருட்கள் ஒரு வீட்டிற்கு அவசியமாகும்பொது அங்கே செல்வவளம் பெருக வேண்டியதும் கட்டாயமாகிறது.   அப்படி வீட்டில் செல்வவளம் பெருக என்ன செய்ய வேண்டும் தெரியுமா??.. உங்கள் வாழ்க்கை தரத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.   வீட்டில் வாஸ்து பலம் பெருகினால் செல்வவளம் தானாக பெருகும்.. அதற்கு சிலவற்றை கடைபிடிக்க வேண்டும்..

அதன்படி , வீட்டில் உள்ள பொருட்களை சரியான இடத்தில், சரியான திசையில் வைப்பதன் மூலம் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்..  அதேபோல் சில  எளிய பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம், உங்கள் வீட்டில் அஷ்ட லட்சுமியை  வசிக்க  வைக்க முடியும். இதை செய்வதன் மூலம்  உங்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு, அனைத்து வளங்களையும் பெறலாம்..

வீட்டில் வைக்க வேண்டிய பொருட்கள் :

வீட்டில் செல்வவளம் பெருக இதை செய்யுங்கள் போதும்...- நடன கணபதி

அந்தவகையில் வீட்டில் நடண கணபதி,  வலம்புரி சங்கு, குபேரன் சிலை மற்றும் புல்லாங்குழல் போன்றவற்றை வைக்கலாம் .

உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் இருந்தால் அப்போது நீங்கள் நடண கணபதி சிலை ஒன்றை வாங்கி வைக்க வேண்டும்.  வீட்டின் வாசலுக்கு நேராக இருக்குமாறு, அதாவது வீட்டிற்குள் நுழைபவர்கள் கண்ணில் படுமாறு நாட்டிய கணபதி சிலையை வைக்கும்போது, வீட்டிற்கு செல்வத்தை வரவழைக்கும்.. இந்த நாட்டிய விநாயாகர் செல்வத்தையும், சந்தோஷத்தையும் குறிக்கும் அடையாளமாகத் திகழ்கிறார்.  

வீட்டில் செல்வவளம் பெருக இதை செய்யுங்கள் போதும்...- வலம்புரி சங்கு

லட்சுமி தேவி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களை வீட்டில் வைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்..  அத்துடன் வீட்டின் பூஜை அறையில், வலம்புரி சங்கு வைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.. எத்தகைய வாஸ்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த வலம்புரிச் சங்குக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் செல்வவளம் பெருக இதை செய்யுங்கள் போதும்...- குபேரன் சிலை

அதேபோல், குபேரன் சிலை.. வீடு, கடை, தொழில், நிறுவனம், கடை போன்ற இடங்களில் குபேரன் சிலை வைத்திருப்பது சிறப்பானது. எப்போதும் குபேரன் சிலையை வடக்கு திசை பார்த்து வைத்திருப்பது தொழிலில் லாபத்தை கொடுக்கும்.  அதிலும் பண மூட்டையுடன் இருக்கும் குபேரன் சிலை அதிக நன்மைகளைத் தரக்கூடியது,  

வீட்டில் செல்வவளம் பெருக இதை செய்யுங்கள் போதும்...- புல்லாங்குழல்

புல்லாங்குழல் .. மனதுக்கு இனிமையான் இசையை கொடுப்பதோடு, வீட்டுக்கு அதிர்ஷத்தையும் கொடுக்கிறது.   புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், கஷ்டங்கள் தீர்ந்து, லட்சுமி தேவி குடிகொள்வாள். கிருஷ்ணபகவானுக்கு உகந்த  புல்லாங்குழல் , அனைத்து வாஸ்த் ஷோஷங்களையும் நீக்க வல்லது.