இந்த வாரத் திருவிழாக்கள்... ஜனவரி 3 முதல் 9ம் தேதி வரை

 
பகற்பத்து

ஜனவரி 3ம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜனவரி 9, 2022ம் தேதி வரையிலான ஒரு வாரக் காலத்தில் வர உள்ள சிறப்பு நாட்கள், சுப முகூர்த்தங்கள், சந்திராஷ்டமம், திருவிழாக்கள் பற்றிய தொகுப்பைக் காண்போம்...

ஜனவரி 3, திங்கட்கிழமை:

மார்கழி 19. பெருமாள் கோவில்களில் பகற்பத்து உற்சவம் தொடங்கும் தினம் இன்று. கட்டபொம்மன் பிறந்தநாள். சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

ஜனவரி 4, செவ்வாய்க்கிழமை:

மார்கழி 20, திருவோணம் விரதம், சந்திர தரிசனம். ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பகற்பத்து உற்சவம். சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

ஜனவரி 5, புதன் கிழமை:

மார்கழி 21, பெருமாள் கோவில்களில் பகற்பத்து உற்சவம். பெரிய நகசு. சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

ஜனவரி 6, வியாழக்கிழமை:

மார்கழி 22, சதுர்த்தி விரதம், சோப பதம். சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

ஜனவரி 7, வெள்ளிக்கிழமை:

மார்கழி 23, மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு உற்சவம். சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

ஜனவரி 8, சனிக்கிழமை:

மார்கழி 24, சஷ்டி விரதம், முருகப் பெருமானை வழிபட சிறந்த நாள். விநாயகர் விரதம், ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் திருக்காட்சி. சந்திராஷ்டமம்: மகம்.

ஜனவரி 9, ஞாயிற்றுக்கிழமை:

மார்கழி 25, ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கஜேந்திரமோட்சம். திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட முருகப்பெருமான் தலங்களில் உற்சவம் ஆரம்பம். சந்திராஷ்டமம்: பூரம்.