இப்படி வழிபாடு செய்து பாருங்கள்... உங்கள் துன்பங்கள் உடனே நீங்கும்..

 
Worship like this and your sufferings will disappear immediately Worship like this and your sufferings will disappear immediately


ஒருவருடைய வாழ்வில் தொடர்ந்து துன்பங்கள் வருவதற்கு பல்வேறு காரணங்கள்  இருந்தாலும் அதற்கு முக்கியமானதாக பார்க்கப்படுவது, முன் ஜென்ம கர்ம வினையே ஆகும். இந்த வினைப்பயனை  யாராக இருந்தாலும் அதை அனுபவித்துதான் கழிக்க முடியும். இந்த நிலையில் அதன் பாதிப்புகளை குறைப்பதற்குத்தான் சில இடங்களுக்குச் சென்று  வழிபட வேண்டும்  என்று நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் நம்பிக்கையுடன் சென்று வழிபடும்போது குறைகள் , கஷ்டங்கள் நீங்குவதை நாம் கன்கூடாக பார்க்கலாம். அதையடுத்து நமது துன்பங்களை அகற்றுவதற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் , அதனால்  கிடைக்கும் பலன்கள் என்ன  என்பதையும் இங்கு பார்க்கலாம்..

Worship like this and your sufferings will disappear immediately

வழிபாடும் அதன் பயன்பகளும் :  

  • சிவன் கோயில்களுக்கு செல்பவர்கள் அங்கிருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபட்டு வந்தால் , தீராத பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.. வழக்குகள் அனைத்து சாதகமாக அமையும்.  
  • இரண்டு சர்பங்கள் இணைந்தது போல் காட்சியளிக்கும் நாக சிலைக்கு, வெள்ளிக்கிழமை நாகு காலத்தில் ( காலை  10.30 - 12 மணி வரை ) மஞ்சள், குங்குமம்  வைத்து செவ்வரலிப்பூ அணிவித்து அபிஷேகம் செய்து வர வேண்டும்.. மேலும் நெய் தீபம் ஏற்றி கணவன் - மனைவி இருவரும் தங்கள் பெயருக்கு அர்ச்சணை செய்துகொண்டால் ஒற்றுமை அதிகரிக்கும்.  
  • அருகிலுள்ள கோயில்களில் தீபமேற்றி வழிபட்டால் , அவ்வப்போது வரும்  தாங்க முடியாத துன்பங்கள், துயரங்களில் இருந்து  காக்கும்..

Worship like this and your sufferings will disappear immediately

  •  கடன் தொல்லைகள் அதிகரித்து குடும்பத்தை  நடத்தமுடியாத  நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபட்டு வந்தால் , இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட வழிபிறக்கும்..  நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமணத்தடை போன்றவை விலகி நன்மைகள் உண்டாகும்..  
  • வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில்  கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.  இதன் மூலமாக வீட்டில் ஏதேனும் ஏவல், பில்லி, பூஷகண சேஷ்டைகள் இருந்தால் அவை அனைத்தும் விலகிவிடும்..  
  • பெருமாள் கோயில்களில்  இருக்கும் சக்கரத்தாழ்வார்கள் சன்னிதியில் 48 நாட்கள் தொடர்ச்சியாக நெய்தீபம் ஏற்றி,12 முறை வலம் வந்து வழிபட்டால் தொழில் மேம்படும் .. வழக்குகள் சாதகமாக முடியும்.  அத்துடன் 21 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், கொடுத்த கடன்கள் வசூலாகும்..  
  • சிவபெருமானின் 64 வடிவ  மூர்த்தங்களின் ஒருவராக இருந்துவரும் பைரவரின் சன்னிதியில் 3 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதி பிறக்கும்.  

சிவபெருமான் வழிபாடு

  • திங்கள் கிழமை வழிபாடு சிவபெருமானுக்கு உகந்தது என்பார்கள். ஆகியால் அன்று வழிபட்டு வந்தால்  விரைவிலேயே வாழ்வில் மேலான நிலையை அடையலாம்..  
  • ஜாதகத்தில் சனி பகவானின் பாதிப்பு இருந்தால் பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் அந்த பாதிப்புகள் விலகும்..
  • அதேபோல் சனிக்கிழமைகளில் சனிபகவான் சன்னிதியில்,  தேங்காய் உடைத்து 2 மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி  தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும்..  
  • நவகிரகத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமைகளில் அகல் விலக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன் - மனைவி இடையிலான கருத்து வேறுபாடுகள் மறையும்..  
  • பிரதோஷ காலத்தில் ரிஷிபாரூட மூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை, பார்வதி தேவியுடன் வழிபாடு செய்து வந்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடையலாம்.. ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்டு வணங்குவது நோய் நொடிகளையும் , வறுமையையும் அகற்றும்..