நெருப்பு, நீர் உங்கள் கனவில் வந்திருக்கிறதா??.. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா??..
தூக்கத்தில் கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் சம்பந்தமே இல்லாமல் சர்ப்பம் துரத்துவது, தீ பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்றெல்லாம் கனவு வரும்.. இயற்கை நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவதாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் பலரும் குழம்புவதுண்டு. அதற்கு தீர்வாகவே இந்த பதிவு.. இதில் கனவில் பஞ்ச பூதங்கள் வந்தால் அதற்கான பலன் என்ன என்பதை பார்க்கலாம்..
1. அக்னியை கனவில் கண்டால் செல்வம் பெருகும்.
2. அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும் . உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
3. இடி மற்றும் மழை சேர்ந்து கனவில் வந்தால், காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்பார்கள்.
4. ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிப்பதாகும்.
5. கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதை அறிவிப்பதாகும்..
6. கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால், வாழ்வில் உயர்வு உண்டாகும்..

7. குளத்தில் கால் கழுவுவதை போல் கனவு வந்தால் தரித்திரம் விலகும் என்பதாகும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.
8. குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியாபார விருத்தியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
9.குளத்தில் குளிப்பது போல கனவு வந்தால் இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது என்பது போல், உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரையும், வெற்றியையும் யாராலும் பறிக்க இயலாது என்று பொருள்.
10. குளம் வறண்டு இருப்பது போல கனவு வந்தால் புதிய செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.
11. தீபத்தை கனவில் கண்டால் உடல்நலம் மேம்படும் என்பதைக் குறிக்கும்.
12. சூரியனைக் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு ஏற்பட்டிருக்கும் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் பெறுவார்கள் என்று பொருள்.
13. தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் வீடு தேடி வரும். உறவினர்களால் தொல்லையும், அலைச்சலும் ஏற்படும். ஆனால், நண்பர்களால் நன்மையும், பணவரவும் இருக்கும் என்று பொருள்.
14. தீப்பிடிப்பது போல கனவு கண்டால் தீமையான செய்திகள் தேடிவர வாய்ப்புள்ளது. தீ மிதிப்பது போல் கனவு வந்தால், சிக்கலில் மாட்டப் போவதன் அறிகுறி என்று பொருள். எனவே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
15. தென்றல் வீசுவது போலவும், தென்மேற்குப் பருவக்காற்று இதமாகக் கடந்து செல்வது போலவும் கனவு கண்டால் எல்லா விருப்பங்களும் நிறைவேறும் என்று பொருள்.

17. நட்சத்திரத்தை பிரகாசமாக கனவில் கண்டால் புத்திரப்பேறு உண்டாவதைக் குறிக்கிறது. நட்சத்திரங்கள் வானில் வேற்றிடம் செல்வது போல கனவு கண்டால் தரித்திரம் ஏற்படும்.
18. நீங்கள் பள்ளம் தோண்டுவது போல கனவு கண்டால் ஓர் ஆபத்தான காரியத்தில் ஈடுபடப் போகிறீர்கள் என்று பொருள்.
19. நீங்கள் ஆற்றைக் கடந்து செல்வது போல் கனவு கண்டால் உங்களை மிகவும் வருத்திக் கொண்டிருக்கும் தொல்லைகள் விரைவில் நீங்கிவிடும். குடும்பச்சுமை குறையும். நீங்கள் நிம்மதியாய் வாழ்வீர்கள் என்று பொருள்.
20. புகையில்லாத நெருப்பை கனவில் கண்டால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று பொருள்.
21. பூமி குலுங்குவது போலவும், அங்கிருந்து ஓடுவது போலவும் கனவு கண்டால் பணிபுரிபவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பணிந்து நடந்து கொண்டால் நல்லதே நடக்கும் என அர்த்தம்.
22. கனவில் வால் நட்சத்திரம் தென்மேற்கில் தெரிந்தால் போர் வரப்போவதன் அறிகுறி. நாட்டிலோ அல்லது உங்களுடைய வீட்டிலோ வரலாம்.

23. வானம் கனவில் வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரப்போகின்றது என்று பொருள். வாழ்வில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழப்போகிறீர்கள்.
24. விளக்கு எரிவது போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
25. விளைநிலத்தை பசுமையுடன் கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
26. பனி பொழிவது போல் கனவு கண்டால் துன்பம் உண்டாகும் என்பதை காட்டுகிறது.
27. மழை கனவில் வந்தால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிப்பதாகும்.
28. மின்னலைக் கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
29. மேக கூட்டங்கள் கனவில் பார்த்தால் சோதனை மேல் சோதனை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
30. யாகம் செய்வதை கனவில் கண்டால் பிரச்சனைகளால் துன்பம் உண்டாகும் என்பதைக் காட்டுவதாகும்.
31. வீடு அல்லது ஏதாவது ஒரு பொருள் தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் விரைவில் பருவம் அடையப் போகிறாள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய வாழ்க்கையில் புதிய திருப்பம் ஒன்று ஏற்படப்போகிறது என்று பொருள்.


