திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாக்கள்..

 
திருப்பதி


திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  இந்தமாதம் ( ஆகஸ்ட் ) நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

திருப்பதி

இதுகுறித்து  திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளும் விழா நடைபெறும்.   தொடர்ந்து  2-ம் தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவையும்,  6-ம் தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவமும் நடைபெற உள்ளது. அத்துடன்   9-ம் தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவம், 11-ம் தேதி சிரவண பவுர்ணமி, ரக்‌ஷா பந்தம் பண்டிகை, வைகானச மகாமுனி ஜெயந்தியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருப்பதி ஏழுமலையான் கோவில்

மேலும்,  12-ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தியும், உற்சவர் மலையப்பசாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல் விழாவும் நடைபெறும். 15-ம் தேதி சுதந்திர தினம், 19-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தான விழாவும், 20-ந்தேதி உறியடி உற்சவமும்,  29-ம் தேதி பலராமர் ஜெயந்தியும் , வருகிற 30 ஆம் தேதி வராஹ ஜெயந்தி மற்றும்   31ம் தேதி விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி) விழாவும் நடைபெற உள்ளது” என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.