துஷ்ட சக்திகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நெருங்காமல் இருக்க இப்படி செய்ங்க..!!

 
 துஷ்ட  சக்திகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நெருங்காமல் இருக்க இப்படி செய்ங்க..!!  துஷ்ட  சக்திகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நெருங்காமல் இருக்க இப்படி செய்ங்க..!!

துஷ்ட சக்திகளின் ஆதிக்கத்தால் குடும்பத்தில் எப்போதும்  துயரங்கள் , கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கிறதா??.. வேலை கிடைக்காமல் இருப்பது , , திருமணத்தில் தடை , தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற பல இன்னல்களில் அவதிப்படுகிறீர்களா??.. இவற்றில் இருந்து விடுபடவும், வாழ்க்கையில் முன்னேற்றம் எற்படவும் அம்மன் கோவில்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்..

நமது பாரம்பரிய கலாச்சாரத்திலேயே இருப்பது தீபம் ஏற்றி வழிபடும் முறை.. காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு, எலுமிச்சை விளக்கு என பல தீப வழிபாட்டு முறைகளில்  குறிப்பிடத்தக்க ஒன்றுதான், குல தெய்வத்திற்கும் பிற அம்மன் தெய்வங்களுக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது. பண்டிகைக்காலங்களில் மாக்கோலமிட்டு, மாவிளக்கு திபம் ஏற்றி அம்மன் வழிபாடு செய்வது இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.  

துஷ்ட  சக்திகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நெருங்காமல் இருக்க இப்படி செய்ங்க..!!

மாவிளக்கு தீபம் செய்வது எப்படி?

பச்சரிசி மாவு, வெல்லம், சர்க்கரை ஏலாக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதிலே சிறிது நெய் விட்டு மாவாக பிசைந்து வைத்துக்கொள்ள  வேண்டும். அந்த மாவினை வாழை இலையில் பரப்பி அதன் நடுப்பகுதியில் குழிபோன்று செய்து அகல் விளக்கு வடிவத்தில்  செய்ய வேண்டும். அந்தக் குழியில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம்  ஏற்றி குல தெய்வம் மற்றும் பிற அம்மன் சன்னதிகளில் வைத்து வழிபடுவதே மாவிளக்கு போடுதல் எனப்படும்,

துஷ்ட  சக்திகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நெருங்காமல் இருக்க இப்படி செய்ங்க..!!

பலன்கள்:  

பெரும்பாலும் வீடுகளில் ஆடி, தை வெள்ளிக்கிழமைகளிலும்,  புரட்டாசி சனிக்கிழமைகளில்  பெருமாளுக்கும் மாவிளக்கு தீபம் போடுவார்கள்..  இவ்வாறு தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்கள் வம்சத்திற்கே எப்போதும் துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் ஏற்படாமல் காக்கும்.  துஷ்ட சக்திகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அணுகாமல் காக்கும்.  குழந்தைகளின் உடல்நிலை மற்றும் கல்வித்திறன் மேம்படும்.  வேலைவாய்ப்பின்மை, திருமண தடைகள், தொழில் முடக்கம் போன்ற தடைகளும் அகலும்.  அத்துடன் வாழ்க்கை மேம்பட நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும்.  

​துஷ்ட சக்திகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நெருங்காமல் இருக்க இப்படி செய்ங்க..!!

குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற எந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் முன்னதாக, குலதெய்வத்திற்கு மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதால் நிகழ்ச்சிகள் எந்த  தடங்களும் இன்றி சுபமாக நடக்கும் என நம்பப்படுகிறது.  வழிபாடு முடிந்ததும் அந்த மாவிளக்கை கோவிலிலேயே வைத்து விடலாம் அல்லது பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கலாம்..  ஆண்டுக்கு ஒரு முறையாவது குல தெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால், குல தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு  எப்போதும் கிடைக்கும்.