திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்! – அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரைத்ததாகத் தகவல்

 

திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்! – அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரைத்ததாகத் தகவல்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அறங்காவல் குழு ஆந்திர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்! – அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரைத்ததாகத் தகவல்ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் என 158 பேருக்கு கொரோனாத் தொற்று பரவியது. கடைசியாக பெரிய ஜீயருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மக்களும், ஊழியர்களும் பீதியடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் திருப்பதி கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் யாருக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஊரடங்குக்குப் பிறகு இதுவரை 2 லட்சம் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சென்றுள்ளதாகவும் அவர்களில் யாருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்! – அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரைத்ததாகத் தகவல்அதே நேரத்தில், ஊழியர்களிடமிருந்து பக்தர்களுக்கு கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்க கோவிலில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.