சிறுவாபுரி கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை!

 

சிறுவாபுரி கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை!

சிறுவாபுரி முருகன் கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுவாபுரி கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை!

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. இந்த ஊரடங்கு 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிறுவாபுரி கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை!

இந்நிலையில் திருவள்ளூர் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒட்டி பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.