சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு.. முதல்வர் உத்தவ் தாக்கரே ஏன் மவுனமாக இருக்கிறார்?.. தேவேந்திர பட்னாவிஸ்

சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு.. முதல்வர் உத்தவ் தாக்கரே ஏன் மவுனமாக இருக்கிறார்?.. தேவேந்திர பட்னாவிஸ்

அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஏன் மவுனமாக இருக்கிறார் என தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் அண்மையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இமெயிலில் அனுப்பிய கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூல் செய்து தன்னிடம் (தேஷ்முக்) கொடுக்கும்படி கூறினார் என்று அதில் குறிப்பி்ட்டு இருந்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு.. முதல்வர் உத்தவ் தாக்கரே ஏன் மவுனமாக இருக்கிறார்?.. தேவேந்திர பட்னாவிஸ்
அனில் தேஷ்முக்

இந்த சூழ்நிலையில் அமைச்சர் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சர் தேஷ்முக் முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தற்கான கடிதத்தை கொடுத்தார். இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்திர பட்னாவிஸ் இது தொடர்பாக கூறியதாவது: தேஷ்முக் அமைச்சர் பதவியிலிருந்து விலகியது எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.

சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு.. முதல்வர் உத்தவ் தாக்கரே ஏன் மவுனமாக இருக்கிறார்?.. தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முதல் நாளிலேயே அவர் தனது ஒழுக்கங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே ஏன் மவுனமாக இருக்கிறார்? அவரது மவுனம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் உத்தரவுக்கு துரோகம் செய்து இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆட்டோ ரிக்ஷா அரசாங்கமாகும். இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் அரசாங்கத்தை தங்களது சொந்த அரசாங்கமாக கருதுகின்றனர். ஒவ்வொரு அமைச்சரும் தன்னை முதலமைச்சராக கருதுகிறார்கள். நான் சொன்னதை உண்மை என்று மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர்.